Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட மாநிலங்களில் வெயிலிற்கு 121 பேர் பலி

Webdunia
செவ்வாய், 12 ஜூன் 2007 (15:32 IST)
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் சுட்டெரிக்கும் வெயிலிற்கு இதுவரை 121 பேர் பலியாகியுள்ளனர்.

வட மாநிலங்களில், இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கல் மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக, மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி போன்ற மாநிலங்களில் கோடை வெயில் அனல் காற்றுடன் வீசி வருகிறது.

நேற்று மத்திய பிரதேசத்தில் அதிகபட்சமாக 118 டிகிரி வெயில் சுட்டெரித்தது. ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரி கங்கா நகரில் 115 டிகிரி வெப்பம் பதிவானது. அதேபோல் அந்த மாநிலத்தின் பல பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

வட மாநிலங்களில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதுவரை 121 பேர் பலியாகியுள்ளனர். உத்திரபிரதேசத்தில் 62 பேரும், மத்திய பிரதேசத்தில் 19 பேரும், பஞ்சாப்பில் 16 பேரும், மத்தியபிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் சேர்த்து 21 பேர் பலியாகியுள்ளனர். டெல்லியில் இருவரும், அரியானாவில் ஒருவரும் வெயிலுக்கு பலியாகி உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments