Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சஞ்சய் தத்திற்கு ஆயுதம் தந்த மூசாவிற்கு 10 ஆண்டு கடுங்காவல்!

Webdunia
புதன், 6 ஜூன் 2007 (16:49 IST)
சஞ்சய் தத்திற்கு ஆயுதம் தந்த மூசாவிற்கு 10 ஆண்டு கடுங்காவல்!

1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்திற்கு ஏ.கே.-47 உள்ளிட்ட துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை அளித்த பாபா மூசா சவானிற்கு மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது!

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த தடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.டி. கோடே, பாபா மூசா சவானிற்கு 3 குற்றங்களுக்காக தனித்தனியே தண்டனைகளை அறிவித்தார்.

தடா சட்டப் பிரிவு 3 (3) ன் கீழ் 8 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூபாய் 1 லட்சம் அபராதமும், தடா சட்டப் பிரிவு 5-ன் கீழ் 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூபாய் 50 ஆயிரம் அபராதமும், தடா சட்டப் பிரிவு 6-ன் கீழ் 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ஆயுதச் சட்டப் பிரிவு 3, 7 மற்றும் 25 உடன் 1-ஏ, 1-பி ஆகிய பிரிவுகளின் கீழ் 4 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூபாய் 50 ஆயிரம் அபராதமும் விதித்து பாபா மூசா சவானிற்கு நீதிபதி தண்டனை அளித்தார்.

இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளதால், ஒட்டுமொத்தமாக 10 ஆண்டுக் காலம் கடுங்காவல் தண்டனையை பாபா மூசா அனுபவிக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக 3 லட்ச ரூபாய் அபாதமாக செலுத்த வேண்டும்.

மும்பை தொடர் குண்டு வெடிப்பின் மூளையாகச் செயல்பட்ட அபு சலீம், ஹனீஸ் இப்ராஹிம் ஆகியோரின் விருப்பத்திற்கு இணங்க பாபா மூசா செயல்பட்டுள்ளார் என்று தனது தீர்ப்பில் நீதிபதி கோடே கூறியுள்ளார்.

பாபா மூசா மட்டுமின்றி, மும்பை தொடர் குண்டு வெடிப்பின் முக்கியக் குற்றவாளியான டைகர் மேமனுக்கு நிதியுதவி செய்ததாக குற்றம் உறுதி செய்யப்பட்ட மூல்சந்த் ஷாவிற்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 5 லட்ச ரூபாய் அபராதமும் விதித்த நீதிபதி, டைகர் மேமனிற்காக ஹத்தி என்ற பெயரில் கணக்கு துவக்கி ரூ.1 கோடியே 9 லட்சத்திற்கு ஹவாலா பண பரிவர்த்தனை செய்ய உதவிய சர்தார் ஷா வாலிகானுக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments