Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை குண்டு வெடிப்பு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

Webdunia
செவ்வாய், 5 ஜூன் 2007 (17:23 IST)
மும்பை தொடர் குண்டு வெடிப்பில் குற்றவாளிகள் என அறிக்கப்பட்டவர்களில் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும ், மூன்று பேருக்கு 5 முதல் 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தடா நீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பையின் பல பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இது தொடர்பான வழக்கு மும்பை தடா நீதிமன்றத்தில் நடைபெற்று, இந்தி நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட நூறு பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது.

இதையடுத்து, குற்றவாளிகளுக்கான தண்டனையை தடா நீதிமன்றம் தொடர்ந்து அளித்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் பர்வேஸ் குரேசி என்பவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ 50 ஆயிரம் அபராதமும், சலீம் மிர்ஷா ஷைக் என்பவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்து தடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.டி.கோடா இன்று தீர்ப்பு வழங்கினார்.

மேலும் மூன்று பேருக்கு 5 முதல் 14 ஆண்டகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்காமல் கரப்பான்பூச்சி பெயரையா வைக்க முடியும்? - சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!

மகாராஷ்டிராவில் பாஜகவே எதிர்பாராத ஒரு வெற்றி கிடைத்துள்ளது.. திருமாவளவன்

பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகள்: தேதிகளை மாற்ற கடிதம் எழுதிய சு வெங்கடேசன் எம்பி..!

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

Show comments