Webdunia - Bharat's app for daily news and videos

Install App

123 ஒப்பந்தம் சிக்கல் நீடிப்பு

Webdunia
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கையை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான 123 ஒப்பந்தம் உருவாக்குவது தொடர்பாக கடந்த 3 நாட்களாக டெல்லியில் நடந்த பேச்சு வார்த்தைக்குப் பின்னரும் ச ிக்கல் நீடிக்கிறது.

அமெரிக்க அயலுறவு அமைச்சகத்த ின் தெற்காசிய விவகாரங்களுக்கான சார்புச் செயலர் நிக்கோலஸ் பர்ன்ஸ் தலைமையிலான குழுவும், இந்திய அயலுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் தலைமையிலான குழுவும் பேச்சு வார்த்தை நடத்தின. இந்த பேச்சு வார்த்தையில் 123 ஒப்பந்ததை உருவாக்குவதில் நிலவி வரும் சிக்கல்கள் களையப்பட்டு உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந் தவித உடன்பாடும் ஏற்பட வில்லை.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசி ய, சிவ்சங்கர் மேனன், பர்ன்ஸ் தலைமையிலான குழுவினருடன் நடத்திய பேச்சு வார்த்தையில் போதுமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், ஆகினும் இரு தரப்பினருக்கும் இடையே இன்னும் பிரச்சனைகளும ், இடைவேளிகளும் உள்ளதாகக் கூறினார்.

" அணு சக்தி ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் உருவாக்குவதில் உடன்படிக்கை ஏற்படும் என்று நம்புகிறோம்" என்று சிவசங்கர் மேனன் கூறினார். இந்திய தரப்பினருடன் நடந்த பேச்சுவார்த்தை பயன்னுள்ளதாக இருந்தது என்றும், ஆகினும் இன்னும் நிறைய பேசவேண்டியது உள்ளது என்று கூறிய பர்ன்ஸ், இறுதி ஒப்பந்தத்தை எதிர்பார்க்கிறோம். அது இரு அரசுகளுக்கும் நன்மை பயக்கக்கூடயது என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது என்றார்.

அணு சக்தி ஒத்துழைப்பு ஒபபந்தத்தின் அடிப்படையில் அமெரிக்கா அளிக்கும் யுரேனிய எரிபொருளை பயன்படுத்தியதற்குப் பிறகு அதன் கழிவை மீண்டும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக மறு ஆக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று இந்தியா கோருகிறது. ஆனால் அந்த உரிமையை இந்தியாவிற்கு அளித்தால் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறு ஆக்கம் செய்து தனது அணு ஆயுத தயாரிப்பிற்கு பயன்படுத்தும் என்று கூறி அமெரிக ்கா மறுக்கிறது.

இது மட்டுமின்றி அணு ஆயுத சோதனை செய்வதில்லை என்கின்ற இந்தியாவின் தன்னிசையான முடிவை நிரந்தரமாக்க வேண்டும் என்று அமெரிக்க கூறுகிறது. அதனை ஏற்கொள்ள இந்தியா மறுத்துவிட்டது.

இந்த இரண்டு பிரச்சனைகள் தான் 123 ஒப்பந்தம் உருவாவதில் பெரும் தடையாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments