Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தானில் 2 காவல் நிலையங்களுக்கு தீ வைப்பு! வன்முறை!

Webdunia
ராஜஸ்தான் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி குஜ்ஜார் சமூகத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டு 11 பேர் கொல்லப்பட்டதைக் கண்டித்து இன்று நடைபெற்று வரும் முழு அடைப்பிற்கிடையேயும் வன்முறை வெடித்துள்ளது!

ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் சமூகத்தினர் அதிகமுள்ள டௌசா, கரௌலி, பண்டி மாவட்டங்களில் நேற்று குஜ்ஜார் சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி ஜெய்ப்பூர்-ஆக்ரா தேச நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. முதலில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை சுட்ட காவல் துறையினர், பிறகு துப்பாக்கியால் சுட்டனர். இதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய எதிர்த்தாக்குதலில் ஒரு காவலர் கொல்லப்பட்டார். மேலும் 2 காவலர்களைக் காணவில்லை. அவர்கள் இருவரும் கொல்லப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காவல் துறையினர் வாகனங்களும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.

காவல் துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டதைக் கண்டித்து இன்று பண்டி, டௌசா, கரௌலி மாவட்டங்களில் முழு அடைப்பு நடத்துமாறு குஜ்ஜார் மகா சபையின் இளைஞர் பிரிவு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த முழு அடைப்பின்போதும் வன்முறை வெடித்தது. டௌசா மாவட்டத்தில் உள்ள டூபி, சிக்கந்திரா ஆகிய இடங்களில் காவல் நிலையங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனையடுத்து மீண்டும் அங்கு வன்முறை வெடித்துள்ளது.

கரௌலி மாவட்டத்தில் உள்ள பிப்பால்கரே முதல் பச்ரோலி வரை குஜ்ஜார் சமூகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஜெய்ப்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

குஜ்ஜார் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் கல்லுலால் குஜ்ஜார் பதவி விலக வேண்டும் என்று குஜ்ஜார் மகா சபை கோரியுள்ளது. குஜ்ஜார்களின் புனிதத் தலமாகக் கருதப்படும் சவாய் போஜ் பந்திருக்குள் அனுமதிக்கமாட்டோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்கொரியா கோர விமான விபத்து.. 179 பேர் பலி.. 2 பேர் கவலைக்கிடம்..!

தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: 8-ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை..!

30 புதிய சிசிடிவி, 40 புதிய செக்யூரிட்டி: மாணவிகள் பாதுகாப்பிற்காக அண்ணா பல்கலை. உத்தரவு

என்னை பிரதமர் வேட்பாளர் என்று கூறாமல், துணை முதல்வர் என்று கூறுவதா? திருமாவளவன்

கட்சியின் வளர்ச்சி குறித்து பேசினோம்.. ராமதாஸ் சந்திப்புக்கு பின் அன்புமணி பேட்டி..!

Show comments