Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுரேனிய சுரங்கம் : முதலீடு செய்ய ஆஸ்திரேலியா விருப்பம்

Webdunia
மெகாலியாவில் சுரங்கம் அமைத்து யுரேனியம் தோண்டி எடுக்கும் திட்டத்தில் முதலீடு செய்து தொழில் நுட்பம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய தூதர் தெரிவித்துள்ளார்.

மெகாலியா மாநிலத்திலுள்ள காசி மலைத் தொடர் பகுதியில் ஏராளமான யுரேனிய வளம் உள்ளது. அங்கு கைலங்க்-பின்டங்க சோஹியான் என்ற இடத்தில் சுரங்கம் அமைத்து யுரேனியத்தை வெட்டி எடுக்கும் திட்டத்தை மெகாலியா அரசும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய யுரேனிய கழகம் முடிவு செய்து உள்ளன.

இத்திட்டத்தில் முதலீடு செய்ய ஆஸ்திரேலியா விரும்புகிறது என்று இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் ஜான் பிலிப் மெக்கார்த்தி யு.என்.ஐ செய்தியாளரிடம் கூறியுள்ளார்.

யுரேனியம் நிலக்கரி ஆகியவற்றை தோண்டி எடுப்பதில் தங்களுடைய பாதுகாப்பு தொழில்நுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக கூறிய கார்த்தி இந்தியா அழைத்தால் முதலீடு செய்ய முன்வருவோம் என்று கூறினார்.

இது தொடர்பாக ஹில்லாங் வந்துள்ள மெக்கார்த்தி மாநில ஆளுநர் பி.எல்.ஜோஷியையும் தலைமை செயலர் ரஞ்சித் சட்டர்ஜி சந்தித்து பேசியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

Show comments