Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்கை நதியில் பேருந்து விழுந்து 21 பேர் பலியாயினர்!

Webdunia
பாட்னா செல்லும் பயணிகள் பேருந்து ஒன்று கங்கை நதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர்!

ரக்சுவல் என்ற இடத்தில் இருந்து பாட்னா செல்ல வேண்டிய பேருந்து இன்று காலை 3.30 மணியளவில் கங்கை நதியின் மீது கட்டப்பட்டிருந்த மகாத்மா காந்தி சேது பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் இரும்பு தடுப்பை உடைத்துக் கொண்டு நதியில் விழுந்தது.

இந்த விபத்தில் ஓட்டுநர், உதவியாளர் உட்பட 21 பேர் உயிரிழந்ததாகவும், 11 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் வைஷாலி மாவட்ட மாஜிஸ்ட்ரேட் லாலன் சிங் தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்தப் பகுதிக்கு மருத்துவர்கள் குழு விரைந்து சென்று காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தது.

மேலும் அப்பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காவல்துறையினரும், முக்கியத் தலைவர்களும் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments