சீனக்கடலுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, வியட்நாம் அருகே தோ சூ தீவுக்கு 250 கி.மீ. தொலைவில் கடலில் விழுந்து நொறுங்கியதாக முதல் கட்ட தகவல் வெளியானது முதல், இதுவரை பல்வேறு முரண்பட்ட தகவல்களே வந்து கொண்டிருக்கின்றன.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து தென்மேற்கில் 2500 கி.மீ தொலைவில் 2 பாகங்கள் இந்தியப் பெருங்கடலில் இருப்பதாக ஆஸ்திரேலிய செயற்கைக் கோளில் அடையாளம் காணப்பட்ட்டன. மேலும் சினாவின் செயற்கைக் கோளிலும் இது போன்ற பாகங்கள் தென்பட்டன. இதைத் தொடர்ந்து இந்தியப் பெருங்கடலிலும் அதன் தென் பகுதியிலும் தேடுதல் வேட்டையில் 29 விமானங்கள், 21 கப்பல்கள், 6 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டன.
இந்நிலையில் மாயமான மலேசிய விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கும் என்று மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார். மேலும் விமானத்தில் பயணம் செய்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கடலில் விமானம் விழுந்திருக்கலாம் என்று நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து விமானத்தை தேடும் பணியை நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் விமானம் விமானிகளால் தான் விபத்துக்கு உள்ளானது என செய்தி வெளியிட்டு வருகின்றன.