Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே! - மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு

Webdunia
புதன், 11 டிசம்பர் 2013 (17:34 IST)
2009 ஆம ் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என ரோம் நகரை தலைமையமாகக் கொண்ட நிரந்தர மக்கள் தீர்ப்பாயம ், மனித உரிமைகள் தினமான இன்று ஜேர்மனி நாட்டின் பிறேமன் நகரில் அறிவித்துள்ளது.
FILE

கடந்த ஒரு வார காலமாக, ஜெர்மனியின் பெரிமனில் இந்த தீர்ப்பாயத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டன. இலங்கை அரசாங்கம் மிகப்பெரிய அளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் சர்வதேச நீதிமன்றமொன்று முதல் தடவையாக இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. சர்வதேச மனித உரிமை ஒன்றியம் மற்றும் இலங்கை சமாதானத்திற்கான ஐரிஸ் ஃபோரம் ஆகியன கூட்டாக இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்திருந்தன. மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை பொதுவாக சர்வதேச நிறுவனங்களுக்கு அனுப்பி வைப்பது வழமையானது எனத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மாநாட்டிற்கு இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுமா என்பது பற்றி உறுதிப்பட எதனையும் கூற முடியாது என மக்கள் தீர்ப்பாய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளை சுதந்திர போராட்ட வீரர்களாகவோ அல்லது பயங்கரவாதிகளாகவோ அடையாளப்படுத்த முடியாது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விழுப்புரத்தில் 30 மணி நேரம் தொடர் மழை.. புதுவையில் வரலாறு காணாத மழை..!

சிலிண்டர் விலை திடீர் உயர்வு.. ஆனால் இல்லத்தரசிகள் நிம்மதி..!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னை மழை: மின்சாரம் தாக்கி ரஜினியின் ‘லால் சலாம்’ பட எடிட்டர் மருத்துவமனையில் அனுமதி!

Show comments