Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

26 அடுக்கு மாடிமேல் அமைத்த மலை! இடித்து தள்ள உத்தரவு

26 அடுக்கு மாடிமேல் அமைத்த மலை! இடித்து தள்ள உத்தரவு
, புதன், 14 ஆகஸ்ட் 2013 (11:33 IST)
சீனாவில், 26 அடுக்கு மாடியில் அமைக்கப்பட்ட செயற்கை மலையை அகற்றும்படி, அந்நாட்டு அரசு உத்தரவிட்டு உள்ளது.

சீனாவின் தலைநகர் பீஜிங்கில், 2007ல், 26 அடுக்கு மாடி கட்டடம் கட்டப்பட்டது. சீன மருத்துவரும், சட்டசபை முன்னாள் ஆலோசகருமான, ஜாங் பிகுங், கட்டடத்தின் மேல் மாடியில், 8,600 சதுர அடியில், செயற்கை மலையை உருவாக்கி, அதை சுற்றிலும் மரங்கள், நீருற்றுகள் போன்றவற்றை அமைத்திருந்தார்.

FILE


அரசியல் செல்வாக்கு பெற்றவர் என்பதால், அப்போது யாரும் இதை கண்டு கொள்ளவில்லை. தற்போது, இந்த கட்டடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள நீருற்றுகள் போன்றவற்றால், கீழ் தளத்தில் குடியிருப்பவர்களுக்கு நிறைய பிரச்னைகள் ஏற்பட்டு உள்ளன.

கட்டடத்தில் தண்ணீர் கசிவதாக புகார் தெரிவித்தனர். இந்த கட்டடத்தில் குடியிருப்பவர்கள் அளித்த புகாரின் காரணமாக, செயற்கை மலையை, இரண்டு வாரத்துக்குள் இடிக்கும்படி, நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. இது போன்ற கட்டடத்தை வடிவமைக்க, ஜாங் பிகுங், உரிய அனுமதி பெறவில்லை என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

webdunia
FILE

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil