Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபரீதத்தில் முடிந்த விமான சாகசம் - அதிர்ச்சியடைந்த மக்கள்

Webdunia
திங்கள், 6 மே 2013 (15:23 IST)
FILE
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி ஒன்றில், வரலாற்று சிறப்பு மிக்க விமானமொன்று எதிர்பாராத விதத்தில் வெடித்து சிதறியது அங்கு கூடியிருந்த மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஸ்பெயின் நாட்டில் உள்ள மேட்ரிட் நகரில் நேற்று வரலாற்று சிறப்பு வாய்ந்த விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.குயர்ட்ரோ விஎண்டோஸ் விமானகளத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை காண 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டிருந்தனர்.

அப்போது, விமான சாகசத்தில் ஈடுபட்ட ஸ்பெயின் நாட்டின் ராணுவ அமைச்சரின் உதவியாளரும், சிறந்த விமான சாகச வீரருமான லடிஸ்லௌ டெஜேடோர் ரோமெரோ (35) என்பவர் 1950 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க எச்.ஏ- 200 சயேடா ஜெட் விமானத்தை ஓட்டி,விண்ணில் சாகசங்கள் செய்தார்.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத நேரத்தில், அந்த விமானம் வெடித்து சிதறியது. பலத்த தீக்காயங்களுடன் உடல் கருகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோமெரோ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments