Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவின் மையப்பகுதியையும் தாக்க முடியும் -வடகொரியா

Webdunia
வியாழன், 28 பிப்ரவரி 2013 (17:34 IST)
FILE
அமெரிக்காவின் மையப் பகுதியையும் தாக்கும் திறன் கொண்ட தொழில்நுட்பம் எங்களிடம் உள்ளது என்று வடகொரியா மிரட்டலான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சீனா அருகே உள்ள வடகொரியாவும், தென்கொரியாவும் பகை நாடுகளாக உள்ளன. தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவை மிரட்டும் வகையில் சமீபகாலங்களாக ஆயுதங்களைத் தயாரித்து வருகிறது. வடகொரிய மண்ணில் இருந்து ஏவுகணை மூலம் அமெரிக்காவைத் தாக்குவதற்கு திட்டம் தயாரித்து ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் வடகொரியா ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியது. இந்த ஏவுகணை 10,000 கிமீ வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 2 வாரங்களுக்கு முன்பு வடகொரியா அணுகுண்டு சோதனை ஒன்றையும் நடத்தியது.

இந்த ஏவுகணை மூலம் அமெரிக்காவில் அணுகுண்டு தாக்குதல் மூலம் அமெரிக்காவில் அணுகுண்டு தாக்குதல் நடத்த முடியும் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக வடகொரியா அரசு இணையதளம் ஒன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதி மட்டுமல்ல அமெரிக்காவின் மையப்பகுதியிலும் எங்களால் அணுகுண்டு தாக்குதல் நடத்த முடியும். அந்த தொழில்நுட்பங்களை நாங்கள் பெற்றுவிட்டோம். எஙளிடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையும், அணுகுண்டும் இருக்கிறது. ஆயுத பலம் உள்ள சுதந்திர நாடாக நாங்கள் இருக்கிறோம். எந்த நாட்டாளும் எங்களை அச்சுருத்த முடியாது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments