Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாலிபானால் மூக்கறுக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை மூலம் மாற்று மூக்கு

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2013 (15:41 IST)
FILE
ஆப்கான் பெண் ஒருவரது மூக்கு மற்றும் காதுகளை தாலிபான் அமைப்பை சேர்ந்த அவரது கணவர் அறுத ்துள்ளது அங்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் தற்போது மூக்கு மற்றும் காதுகள் பொருத்தப்பட்டுள்ளது.

ஆப்கானை சேர்ந்தவர் அலிஷா, தந்தை வாங்கிய கடனை திருப்பி தர முடியாத ஒரு சூழலில் பணத்திற்கு பிணையாக தாலிபான் அமைப்பை சேர்ந்த ஒருவருக்கு அலிஷாவை அவரது 12 வயதிலேயே தருமணம் செய்து வைத்தனர்.

இந்த நிலையில் பல கொடுமைகளுக்கு அலிஷா உட்படுத்தப்பட்டார், பெண் என்ற காரணத்தால் பல பிரச்சனைகளை அவர் சந்தித்துள்ளார். இதன் உச்சமாக அவரது இரண்டு காதுகள் மற்றும் முக்கும் அறுக்கப்பட்டது. இந்த கொடுமையை டைம்ஸ் நாளிதழ் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை என்று செய்தி வெளியிட்டது.

இதனை அடுத்து அலிஷாவுக்கு இதன் மூலம் பல நிதி உதவிகள் குவிந்தன. இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் அவருக்கு மூக்கு மற்றும் காதுகள் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஆப்கான் பெண் தற்போது புது முகம் பெற்றுள்ளார்.

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

Show comments