Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐதராபாத் தொடர் குண்டுவெடிப்பு - உதவி கரம் நீட்டும் அமெரிக்கா

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2013 (11:45 IST)
FILE
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் நடந்துள்ள தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, இதிலிருந்து மீண்டு வர இந்தியாவிற்கு உதவ தயாராக உள்ளாதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் நேற்று இரவு நடந்த தீவிரவாத தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.100 க்கும் மேற்பட்டோர் படு காயமடைந்துள்ளனர்.

துரதிஷ்டவசமாக நடந்தேரிய இந்த துயர சம்பவத்திற்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்து வருகின்றன.இந்நிலையில் இதுகுறித்து,அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விக்டோரியா நுலண்ட் கூறுகையில்,

" ஐதராபாத்தில் நடந்துள்ள கோழைத்தனமான தாக்குதலை அமெரிக்கா வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளோரின் குடும்பத்தாருக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறோம். மேலும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படும் இந்தியாவுடன் அமெரிக்கா என்றென்றும் துணை நிற்கும். இதில் இந்தியாவிற்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் அளிக்க அமெரிக்கா தயாராகவுள்ளது" என தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments