Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரான்சில் ஓரின‌ச் சேர்க்கை திருமணம் சட்டமானது

Webdunia
ஞாயிறு, 3 பிப்ரவரி 2013 (14:52 IST)
FILE
தான் ஆட்சிக்கு வந்தால் ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் அளிப்பேன் என்று வாக்களித்தபடி, ஆட்சிப் பொறுப்பேற்றதும் அதனை சட்டமாக்கியிருக்கிறார் பிரான்ஸ் புதிய அதிபர் ஹோலண்டே.

பிரான்ஸில் ஓரின சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. இதற்கு அங்கீகாரம் அளிக்க அவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதற்கு முன்னால் அதிபராக இருந்த சர்கோசி, ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்க மறுத்துவந்தார்.

இந்நிலையில், தான் ஆட்சிக்கு வந்தால் ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் அளிப்பேன் என்று உறுதியளித்திருந்தார் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஹோலண்டே.

அதன்படி, தற்போது அதிபராகியுள்ள ஹோலண்டே இதற்கான சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். விவாதத்திற்குப் பின் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஓரினச் சேர்க்கை திருமணம் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது. மேலு‌ம், இவ‌ர்க‌ள் குழ‌ந்தைகளை த‌த்தெடு‌த்து வள‌ர்‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம் அனும‌தி அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்பது குற‌ி‌ப்‌பிட‌த்த‌க்கது.

இதற்கு முன்னால் அதிபர் சர்கோசியின் குடியரசுக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் கொலை.. 8 மாதங்களாக பிணத்தை பிரிட்ஜில் வைத்த நபர்..!

Show comments