Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தால் தப்பிய 15,000 முதலைகள் - பீதி‌யி‌ல் மக்கள்

Webdunia
வெள்ளி, 25 ஜனவரி 2013 (12:26 IST)
FILE
தென் ஆப்பிரிக்காவில் உள்ள ரக்வேனா முதலைகள் பண்ணையிலிருந்து 15,000 முதலைகள் தப்பித்திருப்பது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் வடக்கு பகுதியில் உள்ள லிம்போபோ மாகாணத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலியாகினர். ஏராளமானவர்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கி‌ல் சிக்கி முதலைகள் உயிரிழப்பதை தவிர்க்கும் பொருட்டு, ரக்வேனா முதலை பண்ணையின் உரிமையாளர்கள், சுமார் 15000 முதலைகள் அடைக்க‌ப்ப‌ட்டிரு‌ந்த தடத்தின் கதவை திறந்துவிட்டனர்.

வெளியேறிய முதலைகள் வெள்ளத்தில் அங்காங்கே அடித்து செல்லப்பட்டு 120 கி.மீ தூரத்து‌க்கு செ‌ன்றதாக பண்ணையின் உரிமையாளர் செங் லாங்க்மன் கூறியுள்ளார்.

இது குறித்து காவல்துறை செய்தி தொடர்பாளர் ஹங்வனி முலவ்ட்சி கூறுகையில், பண்ணையிலிருந்து வெளியேறிய முதலைகளை பிடிக்க ராணுவ‌த்த‌ி‌ன் உதவியை நாடியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments