Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'முஸ்லிம்களிடமிருந்தும், இடதுசாரிகளிடமிருந்தும் காப்பாற்றவே படுகொலை செய்தேன்'

'முஸ்லிம்களிடமிருந்தும், இடதுசாரிகளிடமிருந்தும் காப்பாற்றவே படுகொலை செய்தேன்'
, புதன், 18 ஏப்ரல் 2012 (10:21 IST)
77 பேரை கொடூரமாகப் படுகொலை செய்த நார்வே இஸ்லாமிய மற்றும் கம்யூனிஸ விரோதி ஆன்டர்ஸ் பிரெய்விக் கோர்ட்டில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார் ஆனால் மன்னிப்புடனான, அல்லது குற்ற உணர்வு அற்ற தொனியில் திமிராகவே ஒப்புக் கொண்டார்.

மேலும் தான் நடத்திய குண்டுவெடிப்பு மற்றும் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடுத் தாக்குதல் இரண்டாம் உலகப்போர்களின் காட்சிகளுக்குப் பிறகு மிகவும் "கவர்ந்திழுக்கிற' காட்சி என்று திமிராக கோர்ட்டில் நீதிபதிகள் முன்னிலையில் வர்ணித்தார்.

ஏற்கனவே எழுதிக் கொண்டு வந்த அறிக்கையை கோர்ட்டில் வாசித்த இந்த இஸ்லாமிய விரோதி நார்வே மற்றும் ஐரோப்பிய அரசுகள் 'பன்முக கலாச்சாரத்தை' தழுவியது மிகப்பெரிய குற்றமாகும் என்றார்.

"நைட் டெம்ப்ளார்" என்ற கம்யூனிஸ எதிர்ப்பு மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கத்தின் தலைவன் தான் என்று அறிவித்து கொண்டார்.

ஆனால் வழக்கறிஞர்கள் அதுபோன்ற குழு எதுவும் இல்லை என்று கூறி முடித்தனர்.

நார்வேயை முஸ்லிம்களிடமிருந்து பாதுகாக்க, அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் நார்வேயின் இடது சாரி அரசியல் கட்சிக் காரர்களை தாக்கியதாக தெரிவித்தார்.

அதாவது தான் நன்மைக்காகவே இந்தப் படுகொலைகளைச் செய்தேன் என்றார் பிரெய்விக், அதாவது இதைவிட பெரிய சிவில் யுத்தம் மூளாமல் தடுக்கவே படுகொலைகள் செய்ததாகவும், மேலும் கூட இந்தத் தாக்குதலை தொடருவேன் என்றும் கோர்ட்டில் அவர் கூறினார்.

நேற்று கோர்ட்டிற்கு அழைத்து வரப்பட்ட பிரெய்விக் முஷ்டியை உயர்த்தி வெற்றி பெருமிதச் செய்கை செய்தார். பின்னர் இந்தச் செய்கை பற்றி அவரிடம் நீதிபதிகள் கேட்டபோது நீதிபதிகளை மதிக்கவேண்டும் என்று தனக்குத் தெரியாது என்றார்.

ஆஸ்லோவில் பிரேய்விக் 77 பேரை படுகொலை செய்தார். தொழிலாளர் கட்சியின் இளையோர் முகாமுக்குள் புகுந்த பிரெய்விக் அங்கு சரமாரியாகச் சுட்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் 69 பேர் பலியாகினர்.

தனது குற்றத்திற்கு சிறிதும் வருந்தாத அவர் தற்காப்பிற்காகவே சுட்டேன் என்று வாதாடினார்.

அந்தப் படுகொலைகளில் உயிர்பிழைத்தவர்கள் பிரெய்விக் இந்த கோர்ட்டையே தனது தீவிரவாத கருத்துக்களுக்கு ஒரு நடைமேடையாக பயன்படுத்துவார் என்று அச்சம் வெளியிட்டனர்.

கோர்ட்டின் அதிகாரத்தையும் மறுத்த பிரெய்விக், கோர்ட்டும் நார்வேயின் 'பன்முக' கலாச்சார அரசியல் கட்சிகளின் ஆதர்வானதே என்றார். தனது செயலை ஒப்புக் கொண்ட பிரெய்விக் அதற்கான வருத்தத்தை தெரிவிக்க மறுத்தார்.

ஆனால் தற்போது கோர்ட்டில் அவர் பேசிய பேச்சினால் பிரெய்விக் என்ற இந்த நபர் பைத்தியக்காரராக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இவருக்கு நடத்தப்பட்ட மனோவியல் சோதனை அறிக்கையில் இவர் பைத்தியம் என்று கூறப்பட்டிருந்தது, ஆனால் மற்றொரு பரிசோதனை இவர் பைத்தியம் இல்லை என்றது.

சமூகத்திற்கு இவர் பெரிய அச்சுறுத்தல் என்று முடிவானால் சிறையிலோ அல்லது மன நலக் காப்பகத்திலோ இவர் 21 ஆண்டுகள் கழிக்க நேரிடும் என்று தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil