Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க கோர்ட்டில் ராஜபக்சவுக்கு எதிரான மனு தள்ளுபடி

Webdunia
வெள்ளி, 2 மார்ச் 2012 (00:37 IST)
FILE
இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில், சிங்கள ராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சிங்கள ராணுவத்தின் மனித உரிமை மீறல்களுக்காக ஜனாதிபதி ராஜபக்சேவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட கர்னல் ரமேஷ் என்பவரின் மனைவி வத்சலா தேவி சார்பில் வழக்கறிஞர் புருஸ் பெய்ன் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

ஆனால், ஜனாதிபதி என்ற முறையில் ராஜபக்சேவுக்கு வழக்குகளில் இருந்து சட்ட பாதுகாப்பு இருப்பதால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை பதில்மனு தாக்கல் செய்திருந்தது.

இதை ஏற்று, ராஜபக்சேவுக்கு எதிரான மனுவை நீதிபதி கொல்லர் கோடல்லி தள்ளுபடி செய்தார். அவர் கூறுகையில்:-

ராஜபக்சேவுக்கு சட்ட பாதுகாப்பு இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியிருப்பதை மீற முடியாது என்பதாலும், நாட்டின் வெளியுறவு கொள்கை பாதுகாக்கப்படும் என்பதாலும், மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments