Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தண்டனை பீதியில் கிலானி

Webdunia
வியாழன், 23 பிப்ரவரி 2012 (17:23 IST)
நீதிமன்ற அவமதிப்பு வழக்தில் தமக்கு தண்டனை கிடைக்கலாம் என்பதால் பாகிஸ்தான் பிரதமர் கிலானி அச்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி மீது வெளிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்கி வைத்ததாக வழக்குகள் உள்ளன.மேலும் அவர் மீது லஞ்ச ஊழல் வழக்குகளும் உள்ளன.

இதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் கிலானிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை கிலானி மீறியதால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கில் பலமான ஆதாரம் உள்ளதால் அவருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை கிடைக்கும் என சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இவ்வழக்கில் தண்டனை கிடைக்கும் பட்சத்தில் கிலானி பிரதமர் பதவியை இழக்க நேரிடுவதோடு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேர்தலிலும் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்படும் என்பதால் அவர் மிகவும் அச்சமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

விழுப்புரத்தில் 30 மணி நேரம் தொடர் மழை.. புதுவையில் வரலாறு காணாத மழை..!

சிலிண்டர் விலை திடீர் உயர்வு.. ஆனால் இல்லத்தரசிகள் நிம்மதி..!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments