Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் வீரர்களை கொடூரமாக கொன்ற தாலிபான்கள்

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2012 (13:54 IST)
தாங்கள் கடத்திச் சென்ற பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்கள் 15 பேரை கொன்று விட்டதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் தெற்கு வஜிரிஸ்தான் பழங்குடியினப் பகுதியிலிருந்து கடந்த மாதம் கடத்தப்பட்டவர்களாவர்.

இவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டதாக தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இஷனுல்லா இஷான் தெரிவித்துள்ளார்.

கைபர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இத்தகவலைத் தெரிவித்த அவர், கொல்லப்பட்டவர்களது சடலம் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் வீசப்பட்டுவிட்டன என்றார்.

இருப்பினும் இஷானின் இந்த அறிவிப்பை தலிபான் அமைப்பின் தலைமை உறுதி செய்யவில்லை. கடந்தாண்டு டிசம்பர் மாதம் 23ம் திகதி இராணுவத்துக்கு எதிராக தலிபான் அமைப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் 15 பாதுகாப்புப் படையினரைக் கடத்திச் சென்றனர்.

தாலிபான்களின் இந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் இராணுவத்துக்கும், தாலிபான் அமைப்பினருக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.



எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

பனையூரில் நாளை தமிழக வெற்றி கழக கூட்டம்.. மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு..!

பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி திடீரென நிறுத்தி வைப்பு.. பொதுமக்கள் அதிருப்தி..!

திருப்பதியில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: ஆந்திர அரசு அறிவிப்பு

Show comments