Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிரவாத பயிற்சி: சிறை வைக்கப்பட்ட 45 சிறார்கள் மீட்பு

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2011 (20:19 IST)
பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி அளிப்பதற்காக மதரசா ஒன்றில் சங்கிலியா கட்டி வைக்கப்பட்டிருந்த 45 சிறார்கள் மீட்கப்பட்டனர்.

பாகிஸ்தான் தீவிரவாதத்தின் பிறப்பிடமாக இருப்பதாகவும், அங்குள்ள சில குறிப்பிட்ட மதரசாக்கள்,மார்க்க கல்வி என்ற பெயரில் குழந்தைகளுக்கு தீவிரவாதத்தை பயிற்றுவிப்பதாகவும் நீண்ட நாட்களாகவே குற்றச்சாட்டு இருந்துவருகிறது.

இந்நிலையில் அதனை நிரூபிக்கும்விதமாக, கராச்சியில் உள்ள மதரசா ஒன்றின் ரகசிய அறையில் தீவிரவாத பயிற்சி அளிக்கும் திட்டத்துடன் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்டிருந்த 45 சிறார்களை போலீசார் மீட்டுள்ளனர்.

இது குறித்து தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் கராச்சியின் மத்திய பகுதியில் உள்ள ஜகாரியா என்ற மதரசாவில் அதிரடி சோதனை மேற்கொண்ட போலீசார், அங்குள்ள ரகசிய அறை ஒன்றில் சங்கிலியால் கட்டி சிறைவைக்கப்பட்டிருந்த 45 சிறார்களை மீட்டனர்.

இந்த சிறுவர்களை அடித்து துன்புறுத்தி,கட்டாயப்படுத்தி தீவிரவாத பயிற்சி அளித்து வந்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்களில் 18 பேர் 20 வயது அல்லது அதற்கும் கீழானவர்கள் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே சிறார்களை சங்கிலியால் கட்டிவைத்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்த அந்த மதரசா நிர்வாக அதிகாரி ஒருவர், அவர்கள் போதை மருந்துக்கு அடிமையானவர்களாக இருந்ததால், அவர்களை சிறந்த முஸ்லிமாக மாற்றும் நோக்கிலேயே அவ்வாறு சங்கிலியால் கட்டிவைத்ததாக கூறினார்.

இருப்பினும் இது குறித்து விரிவாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments