Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைக்கேல் ஜாக்சன் மரணம்: டாக்டருக்கு 4 ஆண்டுகள் சிறை

Webdunia
புதன், 30 நவம்பர் 2011 (12:58 IST)
மைக்கேல் ஜாக்சன் மரணத்துக்கு காரணமான டாக்டருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் 2009ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது சாவு பற்றிய மர்மம் அதிகரித்த வேளையில் அவரது சாவுக்கு அவரது மருத்துவர்தான் காரணம் என்று போலீசாரால் துப்பறியப்பட்டது.

அவரது குடும்ப டாக்டர் கான்ராடு முர்ரே அளவுக்கு அதிகமான சக்தி வாய்ந்த மாத்திரை வழங்கியதுதான் காரணம் என்று கண்டறியப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர் மீது லாஸேஞ்சல்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை 6 வாரங்கள் நடைபெற்றது. அப்போது ஜாக்சனின் குடும்ப டாக்டர் அரக்கத்தனமாகவும், தீமையாகவும் செயல்பட்டுள்ளார் என்றும் மரணத்துக்குக் காரணம் மருத்துவரே என்றும் கூறி 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார்.

இதை தொடர்ந்து கடந்த 7-ந் தேதி டாக்டர் கான்ராடு முர்ரே குற்றவாளி. அவர் கொடுத்த அதிகசக்தி வாய்ந்த மாத்திரை தான் மைக்கேல் ஜாக்சனின் உயிரை பறித்தது. எனவே அவர் ஒரு கொலை குற்றவாளி என கோர்ட்டு அறிவித்தது.

இதற்கிடையே, மரணம் அடைந்த மைக்கேல் ஜாக்சன் குழந்தைகளுக்கும், அவர் நடத்திய எஸ்டேட் நிறுவனத்துக்கும் டாக்டர், முர்ரே ரூ.500 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன் மீதான விசார ணைக்கு வருகிற ஜனவரி 23-ந் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் டாக்டர் முர்ரே டாக்டர் தொழில் செய்ய நிரந்தமாக தடை விதிப்பது குறித்தும் அப்போது தெரிய வரும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புகையில்லாத போகி பண்டிகை கொண்டாடுவோம்.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்..!

தேர்தல் வந்தால் பொங்கல் பரிசுத்தொகை:சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!

பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட தயார்: சீமான் பேச்சுகு அண்ணாமலை ஆதரவு!

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

Show comments