Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானுக்கு அளிக்கும் நிதியுதவியை முடக்குகிறது அமெரிக்கா!

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2011 (14:10 IST)
பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் அமெரிக்க நிதி உதவிகள் அனைத்தையும் முடக்கிவைக்கும் மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த எம்.பி.யும், அயலுறவுத் துறை விவகாரங்களுக்கான அமெரிக்க நாடாளுமன்ற கமிட்டி உறுப்பினருமான டெட் போ இந்த மசோதவை தாக்கல் செய்தார்.

ஒஸாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது முதல் பாகிஸ்தான் நம்பிக்கையற்ற வகையிலும், அமெரிக்காவுக்கு ஆபத்தாகவும் இருந்துவருவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே பாகிஸ்தானுக்கான உதவிகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என தீர்மானத்தை அவையில் தாக்கல் செய்த டெட் போ கூறினார்.

இந்த மசோதா பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து நிதிஉதவிகளும் நிறுத்தப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

எனினும் அணுஆயுதங்களை பாதுகாப்பதற்காக வழங்கப்படும் நிதிஉதவி மட்டும் தொடர்ந்து வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

Show comments