Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே இரவில் 8 பெண்களுடன் உல்லாசம்: மாட்டிக்கொண்ட இத்தாலி பிரதமர்!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2011 (16:16 IST)
பெண்கள் தொடர்பான சர்ச்சையில் அடிக்கடி சிக்கும் இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனி, ஒரே இரவில் 8 பெண்களுடன் உல்லாசமாக இருந்ததை தனது வாயாலேயே ஒப்புக்கொண்டு தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனி (74).பெண்கள் விடயத்தில் மிகவும் சபல புத்தியுடைய இவர் மீது ஏற்கனவே பல பாலியல் புகார்கள் உள்ளன.

பிரதமர் பதவியில் இருக்கும்போதும், அந்த பதவிக்கான கவுரவத்துடன் நடந்துகொள்ளாமல் அடிக்கடி கேளிக்கை, விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும்,அத்தகைய நிகழ்ச்சிகளை தாமே நடத்துவதும் இவருக்கு வாடிக்கையான ஒன்று!

அவ்வாறு இவர் அண்மையில் நடத்திய விருந்து நிகழ்ச்சி ஒன்றில் விபச்சார அழகிகள் கலந்து கொண்டதாகவும், அவர்கள் அரசு விமானங்களிலேயே பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் அவர்கள் அழைத்து வரப்பட்டதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் பிரதமர் பெர்லஸ்கோனி கடந்த 2009 ஆம் ஆண்டில், போதை மருந்து கடத்தல் புரோக்கர் தராந்தினியுடன் தொலைபேசியில் பேசியபோது பதிவு செய்யப்பட்ட உரையாடல் ஒன்று தற்போது அம்பலமாகி உள்ளது.

அதில் தராந்தினியுடன் பேசும் பிரதமர் பெர்லஸ்கோனி," எனது அறையின் வாசலில் 11 பெண்கள் கியூவில் நின்றனர்.அவர்களில் என்னால் 8 பேருடன் மட்டுமே உல்லாசத்தில் ஈடுபட முடிந்தது.அதற்கு மேல் என்னால் முடியவில்லை!" என்று கூறுகிறார்.

மேலும், "உன்னிடம் பெண் இருந்தால் இரண்டு அல்லது மூன்று பேரை மட்டும் கொண்டுவா. அதே சமயம் உயரமான பெண் வேண்டாம்.ஏனெனில் நாங்கள் உயரமானவர்கள் இல்லை!" என்றும் தராந்தின ியிடம் பிரதமர் பெர்லஸ்கோனி கூறுகிறார்.

மற்றொரு உரையாடலில் இளம் பெண் ஒருவரிடம்," உன்னைப் போன்றவர்களுடன் உல்லாசமாக பொழுதை கழித்த பிறகு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் எனது பிரதமர் பணியை கவனிக்கிறேன்!" என்று தமாஷாக கூறுகிறார் பெர்லஸ்கோனி.

இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள இந்த தொலைபேசி உரையாடல, பிரதமர் பெர்லஸ்கோனியின் பதவியை நிச்சயம் இந்த முறை காவு வாங்கிவிடும் என்று கூறுகின்றனர் இத்தாலி அரசியல் நோக்கர்கள்!

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!