Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் 11 ஷியா முஸ்லிம்கள் சுட்டுக் கொலை

Webdunia
சனி, 30 ஜூலை 2011 (12:29 IST)
பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் ஷ ியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த 11 பேரை அடியாளம் தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிறுபான்மை முஸ்லிம் பிரிவினரான இவர்கள் மீது இரண்டாம் நாளாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதில் இதுவரை பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

பலியானவர்களில் இன்று ஒரு பெண்மணியின் உயிரும் அடங்கும். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

தடை செய்யப்பட்ட லஷ்கரே ஜாங்வி அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. வியாழனன்று நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சன்னி முஸ்லிம் பிரிவு பண்டிதர் மால்வி கரீம் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கவே இந்தத் தாக்குதல் என்று அந்த அமைப்புக் கூறியுள்ளது.

பாகிஸ்தானில் பெரும்பான்மை முஸ்லிம்கள் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள் ஷியா பிரிவினர் பாகிஸ்தானின் மக்கள் தொகையில் 15% உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறுதிச்சடங்கு செய்த மறுநாள் உயிரோடு வீட்டுக்கு வந்த நபர்.. குஜராத்தில் ஒரு அதிசய சம்பவம்..!

ஆன்லைன் வகுப்பு தான்.. 5ஆம் வகுப்பு வரை பள்ளிக்கு செல்ல வேண்டாம்: முதல்வர் உத்தரவு..!

பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் மோடி: ஜி20 மாநாட்டில் பங்கேற்பு..!

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

Show comments