Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாவேசிற்கு புற்றுநோய் வெனிசூலா மக்கள் துயரம்

Webdunia
சனி, 2 ஜூலை 2011 (11:02 IST)
வெனிசூலா நாட்டு அதிபர் ஹியூகோ சாவேஸ் புற்று நோயை எதிர்கொண்டுள்ளார் என்ற செய்தி அந்த நாட்டு மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாக அங்கிருந்து வரும் நாளிதழ் செய்திகள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்து சோஷலிசம் மலரச்செய்வார் சாவேஸ் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் மக்களுக்கு இந்தச் செய்தி பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் கியூபாவில் தனக்கு புற்றுநோய் கட்டி ஒன்று அகற்றப்பட்டது என்று சாவேஸ் தெரிவித்தது அந்த நாட்டு மக்களிடையே துயர உணர்வை கிளப்பியதாக வெனிசூலா நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

கியூபாவிலிருந்த படியே அவர் ஆட்சி செய்தாலும் அவர் எத்தனை நாட்கள் கழித்துத் திரும்புவார் என்பதும் முழு ஆரோக்கியத்துடன் செயல்பட முடியாமா என்பதும் சந்தேகமாகியுள்ளது.

இந்த நிலையில் வெனிசூலா அதிபருக்கு உடல் நல வாழ்த்துக்களை கோஷமிட்டபடி அவரது ஆதரவாளர்கள் கர்காஸ் நகரில் ஊர்வலமாகச் சென்றனர்.

ரூ.55,000ஐ தாண்டியது தங்கம் விலை.. ஒரு லட்சத்தை தாண்டியது வெள்ளி விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! – மிஸ் பண்ணிடாதீங்க!

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

Show comments