Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிற்கு இரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்!

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2011 (14:12 IST)
இந்தியாவிற்கு விற்க ஒப்புக்கொண்ட அட்மிரல் கோர்ஸ்கோவ் விமான தாங்கிக் கப்பல் நீண்ட காலமாக தாமதமாகி வரும் நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை இந்தியாவிற்கு இரஷ்யா விற்கிறது.

இத்தகவலை இரஷ்ய கப்பற்படைத் தளபதி தெரிவித்ததாக அந்நாட்டின் செய்தி நிறுவனமான ரியா தெரிவித்துள்ளது.

“இந்த ஆண்டின் இறுதிக்குள் நீர்மூழ்கிக் கப்பலை இந்தியாவிற்கு அளித்துவிடுவோம ்” என்று அட்மிரல் விளாடிமிர் வியோசோட்ஸ்கி கூறியுள்ளார். இரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலை இயக்குவதற்கான முழு பயிற்சியையும் இந்திய கப்பற்படையினருக்கு வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார் என்று ரியா செய்தி தெரிவிக்கிறது.

73 கடற்படை வீரர்களுடன் 600 மீட்டல் ஆழத்தில் தொடர்ந்து 200 நாட்கள் வரை கடலுக்குள் இருக்கக்கூடிய நேர்பா என்றழைக்கப்படும் இந்த நீர்மூழ்கிக் கப்பல், டார்பிடோக்களையும், வழிகாட்டி செலுத்தக்கூடிய ஏவுகணைகளையும் கொண்டதாகும்.

2008 ஆம் ஆண்டு கடலுக்குள் பயிற்சி செய்யப்பட்டபோது இந்த நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த தீயணப்பு அமைப்பு தவறுதலாக இயக்கப்பட்டதால் 20 பேர் மூச்சடைத்து இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments