Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.நா.நிபுணர்குழு அறிக்கையின் கேள்விகளுக்கு இலங்கை ரகசிய பதில்?

Webdunia
புதன், 22 ஜூன் 2011 (14:07 IST)
ஐ.நா. நிபுணர்குழு அறிக்கையின் 31 கேள்விகளுக்கு இலங்கை அரசாங்கம் இரகசியமாக பதிலளித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.யான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஒதுக்கீடு சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்றுகையில், ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை நிராகரிக்கப்பட்டு விட்டதாக அரசு கூறுகின்ற போதிலும், அந்த அறிக்கையில் கேட்கப்பட்டுள்ள 31 கேள்விகளுக்கும் அரசு மிகவும் இரகசியமான முறையில் பதிலளித்துள்ளது என்று தெரிவித்தார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பொதுமக்களில் ஒருவர் கூடக் கொல்லப்படவில்லை என அரசு கூறுகின்றது. இதனை யாரும் நம்பமாட்டார்கள்,இதனை அரசு சர்வதேசத்திடம் விளக்கிக் கூற வேண்டும்.

இலங்கை தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாகவும் ச ேனல் 4 வீடியோ காட்சி தொடர்பாகவும் சர்வதேசத்திற்கு விளக்கமளிக்க அரசு இதுவரையில் எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

இவை தொடர்பில் சர்வதேச நாடுகளுடன் பேச்சுக்களை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அரசு அதனை செய்யவில்லை.இரண்டு வருடங்களுக்கு முன்பு ச ேனல் 4ல் வீடியோ காட்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அப்போது கூறியது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நாட்டிற்கு ஏற்படும் ஆபத்துக்கள் அவப்பெயர்களை தடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். இது தொடர்பாக ஊடகங்களுடனோ, நாட்டு மக்களுடனோ அல்லது நாடாளுமன்றத்திலோ பேசுவதில் எந்த பயனும் இல்லை. சர்வதேசத்துடன்தான் பேச வேண்டும்.

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை பொய்யென நிரூபிப்பது அரசின் கைகளில் தான் இருக்கிறது. ஆனால் இது தொடர்பில் அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது தொடர ்பா க உடனடியாக சர்வதேசத்துடன் பேச வேண்டும்.

ஐ. நா. மனித உரிமைகள் சபையின் அலுவலகம் ஒன்றை கொழும்பில் திறந்து இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை பொய்யாக்குவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலஸ்தீனர்களுக்கு ஜோர்டானில் இடம், காசாவையும் வளைக்கும் இஸ்ரேல்!? - ட்ரம்ப் முடிவால் அதிர்ச்சி!

ஏழை, எளிய மக்களுக்கு எதுவுமே இல்ல..? பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றம்! - தவெக தலைவர் விஜய்!

மகிழ்ச்சி மற்றும் ஏமாற்றம்.. மத்திய பட்ஜெட் குறித்து அன்புமணி ராமதாஸ்..!

சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் நாடு கடத்தல்.. காவல்துறை உயர் அதிகாரி தகவல்..!

குழந்தை பெற்று குப்பை தொட்டியில் வீசிய கல்லூரி மாணவி: தஞ்சை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

Show comments