Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் இராணுவ அதிகாரி கைது

Webdunia
புதன், 22 ஜூன் 2011 (11:49 IST)
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புட‌ன் தொடர்புடைய பாகிஸ்தான் இராணுவ தலைமையகத்தில் பணியாற்றிவந்த பிரிகேடியர் ஒருவர் கைது செய்யப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

ராவ‌ல்‌பி‌ண்டி‌யி‌ல் பிரிகேடியர் அலி கான் கைது செய்யப்பட்டு இராணுவ உயர் அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருவதாக தலைமை இராணுவ செய்தித்தொடர்பாளர் ஜெனரல் அத்தர் அப்பாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கான் கைது செய்யப்பட்டதை பிபிசி உருது தொலைக்காட்சி முதலில் வெளியிட்டது. ,ராணுவ தலைமையகத்தின் ஒழுங்குமுறை இயக்குநரகத்தில் 2 ஆண்டுகளாக அவர் பணியாற்றி வந்துள்ளார். ஒன்றரை மாதங்களுக்கு முன்பு அவர் திடீரென மாயமாகி விட்டதாக அந்த தொலைக்காட்சி செய்தி தெரிவிக்கிறது.

பயங்கரவாத அமைப்புடன் கானுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அப்பாஸ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் விரிவான விவரங்களைத் தர மறுத்துவிட்டார். அது மக்களை பாதிக்கக்கூடும் எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

பலுசிஸ்தானில் ஷாம்ஸி விமானதளம் மீதான தாக்குதலின் சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்ட தடைசெய்யப்பட்ட ஹிஜ்ப் உத் தெஹ்ரீர் அமைப்புடன் அலி கானுக்கு தொடர்புள்ளதாக குற்றம்சாப்பட்டுள்ளது.

தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! அதிமுகவை விளாசிய ஆர்.எஸ் பாரதி.!!

தொட்டிலில் தூங்கிய 24 நாள் குழந்தை.. குரங்கு கடித்து குதறியதால் பெற்றோர் அதிர்ச்சி..!

19 வயது பெண்ணை காதலித்த இரு இளைஞர்கள்.. கொலையில் முடிந்த முக்கோண காதல்..!

மேற்கு வங்க ரயில் விபத்து..! பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு..! மீட்பு பணி தீவிரம்..!!

பிரதமர் மோடியின் தமிழகம் பயணம் திடீர் ரத்து! என்ன காரணம் தெரியுமா?

Show comments