Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை எதிரியாய் கருதும் போக்கை பாகிஸ்தான் கைவிட வேண்டும்: நவாஸ் ஷெரீஃப்

Webdunia
செவ்வாய், 17 மே 2011 (13:32 IST)
இந்தியாவைத் தங்களது பெரும் எதிரியாகக் கருதும் போக்கை பாகிஸ்தான் அரசும், இராணுவமும் கை விட வேண்டும் என்றும் இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வழிகளை ஆராய வேண்டு்ம் என்றும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக உள்ள நவாஸ் ஷெரீஃப், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை பலப்படுத்தவும், முன்னெற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கராச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு ஷெரீஃப் கூறியுள்ளார். அமெரிக்க அதிரடிப் படையினர் ஒசாமா பின் லேடனை கொன்றது போன்ற நடவடிக்கையெடுத்தால் தக்க பதிலடி தருவோம் என்று பாகிஸ்தான் இராணுவம் பேசிவரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவின் அவசியத்தை ஷெரீஃப் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

1999 ஆம் ஆண்டில் கார்கில் போர் வெடித்ததற்கான சூழலை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் நவாஸ் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

Show comments