Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கராச்சியிலிருந்து தாவூத் தப்பி ஓட்டம்

Webdunia
வெள்ளி, 6 மே 2011 (19:34 IST)
இந்தியாவால் நீண்ட நாட்களாக தேடப்படும் மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து சவூதி அரேபியாவுக்கு தப்பி சென்றுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானில் பதுங்கி இருந்த பின்லேடனை அமெரிக்க கமாடோ படையினர் அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தி கொன்றது அந்நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யை மிகவும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அத்துடன் இதேப்போன்ற தாக்குதலை நடத்தும் திறன் இந்திய இராணுவத்திற்கும் உண்டு என்று இராணுவ தளபதி கூறியிருந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தானின் கராச்சி நகரில் வைத்து தாவூத் இப்ராகிமை பாதுகாத்து வந்த ஐஎஸ்ஐ, பின்லேடன் கொல்லப்பட்ட சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவரை கராச்சியிலிருந்து தப்பிச் செல்லுமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது.

இதனையடுத்து தாவூத், தனது கூட்டாளி சோட்டா ஷகீலுடன் சவூதி அரேபியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புகையில்லாத போகி பண்டிகை கொண்டாடுவோம்.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்..!

தேர்தல் வந்தால் பொங்கல் பரிசுத்தொகை:சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!

பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட தயார்: சீமான் பேச்சுகு அண்ணாமலை ஆதரவு!

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

Show comments