Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரியாவிற்கு பான் கீ மூன் கண்டனம்!

Webdunia
ஞாயிறு, 24 ஏப்ரல் 2011 (17:16 IST)
சிரியாவில் போராடிவரும் மக்களுக்கு எதிராக அந்நாட்டு இராணுவம் நடத்திய தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதற்கு ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அ ¨தியான முறையில் போராடும் மக்கள் மீதான தாக்குதலை சிரியா அரசு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள மூன், படுகொலைகள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சர்வதேச மனித உரிமைகளையும், பத்திரிக்கைச் சுதந்திரத்தையும் சிரியா அரசு மதித்து நடந்துகொள்ள வேண்டும் என்றும், மக்களின் நியாயமான கோரிக்கைகளை மதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இரானின் உதவுயுடன் மக்கள் போராட்டத்தை சிரியா நசுக்கிறது என்றும், இத்தகைய வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புயல் சின்னம்.. 3ஆம் எண் கூண்டை ஏற்ற துறைமுகங்களுக்கு அறிவுறுத்தல்..!

ஏஐ துறை ஆலோசகராக சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்: டிரம்ப் நியமனம்..

ஊழியர்களுக்கு கார், ராயல் என்பீல்ட் வாங்கி கொடுத்த தொழிலதிபர்! - சென்னையில் ஆச்சர்யம்!

எலான் மஸ்க் என் நண்பர்தான்.. அதுக்காக அவர் அதிபராக முடியாது! - ட்ரம்ப் கொடுத்த அதிர்ச்சி பதில்!

விவாகரத்து பெற்ற பணக்காரர்களுக்கு குறி.. 3 பேரை திருமணம் செய்து ரூ.1.21 கோடி மோசடி செய்த இளம்பெண்..!

Show comments