2008 ஆம் ஆண்டில் மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய 8 பேர் ஸ்பெயினில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை தாக்குதலை நடத்திய குழுவில் இவர்கள் பணியாற்றியதாகவும், இந்த 8 பேரும் ஸ்பெயினின் பார்சிலோனாவில் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டவர்களில் 7 பேர் பாகிஸ்தானியர்கள் ஆவர்.இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை வட ஆப்ரிக்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக ஸ்பெயின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மும்பை தாக்குதலில் பயன்படுத்துவதற்காக பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட போலி அடையாள ஆவணங்களை தயாரித்த குழுவில் இவர்கள் இடம்பெற்றிருந்ததாக அத் தகவல்கள் தெரிவித்தன.
மும்பை தாக்குதலுக்கு காரணமான இயக்கம் என்று இந்தியாவால் குற்றம்சாற்றப்படும் லஷ்கர் இ தொய்பாவுக்கு நிதி உதவியும், போலி ஆவணங்களும் அனுப்பியதாக இவர்கள் மீது குற்றம்சாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.