Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது

Webdunia
ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2010 (11:43 IST)
அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன், தற்போதைய வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் தம்பதியின் மகள் செல்சியா (30). இவருக்கும் நிதி நிறுவன அதிபர் மார்க் மெஷ்வின்ஸ்கி (32) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இருவரும் காதலித்து வந்தனர் இதைத் தொடர்ந்து அவர்களது திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. நியூயார்க்கில் ரைனிபேக் என்ற இடத்தில் உள்ள 50 ஏக்கர் பரப்பளவில் ஆன எஸ்டேட்டில் நேற்று இரவு திருமணம் நடந்தது.

திருமணத்தில் செல்சியா பிரபல ஆடை நிபுணர் விரா வாஷ் வடிவமைத்திருந்த கவுனை அணிந்திருந்தார். இது திருமணத்துக்கு வந்திருந்த அனைவரையும் கவர்ந்தது.

திருமணத்துக்கு, பிரபல ஹாலிவுட் டைரக்டர் ஸ்டீவன் பீல்பர்க், ராணி ஒப்ரா, வின்பிரே, இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ஜான் மேஜர் உள்ளிட்ட 500 முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கலந்து கொண்டனர்.

அதிபர் ஒபாமா அழைக்கப்பட வில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்திருக்கலாம் என தெரிகிறது. எனவே, அவர் திருமணத்தில் கலந்து கொண்டாரா என்று தெரிய வில்லை.

இந்த திருமணத்திற்கு ரூ.22 கோடி வரை செலவழிக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புயல் சின்னம்.. 3ஆம் எண் கூண்டை ஏற்ற துறைமுகங்களுக்கு அறிவுறுத்தல்..!

ஏஐ துறை ஆலோசகராக சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்: டிரம்ப் நியமனம்..

ஊழியர்களுக்கு கார், ராயல் என்பீல்ட் வாங்கி கொடுத்த தொழிலதிபர்! - சென்னையில் ஆச்சர்யம்!

எலான் மஸ்க் என் நண்பர்தான்.. அதுக்காக அவர் அதிபராக முடியாது! - ட்ரம்ப் கொடுத்த அதிர்ச்சி பதில்!

விவாகரத்து பெற்ற பணக்காரர்களுக்கு குறி.. 3 பேரை திருமணம் செய்து ரூ.1.21 கோடி மோசடி செய்த இளம்பெண்..!

Show comments