Webdunia - Bharat's app for daily news and videos

Install App

648 இந்தியர்கள் பாகிஸ்தான் சிறைகளில் அடைப்பு

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2010 (17:47 IST)
பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்தியக் கைதிகளின் பட்டியலை அந்நாட்டு அயலுறவுத் துறை அமைச்சகம் அளித்துள்ள நிலையில்,648 இந்தியர்கள் அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்த பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் இரு நாடுகளும் இது தொடர்பாக செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த பட்டியலை பாகிஸ்தான் அளித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் ஒவ்வொரு ஆண்டு ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் பரஸ்பரம் கைதிகளின் பட்டியலை பரிமாறிக்கொள்ள வேண்டும்.

பாகிஸ்தான் அளித்துள்ள பட்டியலின்படி, 648 இந்தியர்கள் அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதே சமயம் கடந்த் ஜனவரி 1 ஆம் தேதி இந்தியா அளித்த பட்டியலின்படி, 633 பாகிஸ்தானியர்கள் இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்தியா தரப்பில் ஜூலை 1 ஆம் தேதி அளிக்கப்பட வேண்டிய கைதிகளின் பட்டியல் இன்னும் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு.. பெட்ரோல் விலை உயருமா?

ஐ.நா., பொதுச்செயலாளர் இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு தடை: அதிர்ச்சி தகவல்..!

காந்தி ஜெயந்தி தினத்தில் புதிய அரசியல்: பீகாரில் சாதிப்பாரா பிரசாந்த் கிஷோர்?

சதுரகிரியில் மஹாளய அமாவாசை வழிபாடு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..!

தமிழக காங்கிரஸ் பாத யாத்திரைக்கு அனுமதி மறுப்பு: போலீசாருடன் செல்வபெருந்தகை வாக்குவாதம் ..!

Show comments