Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணையதள மோசடி: சென்னை வா‌லிபருக்கு அமெரிக்காவில் 81 மாதம் ‌சிறை

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2010 (08:42 IST)
இணையதளம் மூலம் பங்கு மார்க்கெட்டில் மோசடி செய்து பலகோடி சுருட்டியதாக குற் ற‌ம ்ச ா‌ற் றப்பட்ட சென்னை இளைஞர் ஒருவருக்கு அமெரிக்க ‌ நீ‌திம‌ன்ற‌ம் 81 மாதம் ‌ சிறை தண்டன ையு‌ம் ம‌ற்றொரு சென்னை இளைஞருக்கு 2 ஆண்டு ‌ சிறை தண்டனை வித ி‌த்து‌ள்ளது.

சென்னையை சேர்ந்த ஜெய்சங்கர் மாரிமுத்து (36), இவரது நண்பர் திருஞானம் ராமநாதன் (36) இருவரும் சேர்ந்து கடந்த 2006ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் டிசம்பர் வரை இணையதளம் மூலம் மோசடியில் ஈடுபட்டனர். பங்கு மார்க்கெட்டிலும் மோசடி செய்தனர்.

அதிக அளவில் பரிவர்த்தனையாகாத பங்குகளை மோசடியாக விலை உயர்த்தி தரகர்கள் கணக்கில் வரவு வைத்தனர். பிறகு அந்த கணக்கை பயன்படுத்தி பெரிய அளவில் பங்குகளை வாங்கி குவித்து பணம் சம்பாதித்தனர்.

இதுபோன்ற மோசடிகளை அவர்கள் இந்தியாவிலும் தாய்லாந்திலும் செய்தனர். இது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் ஹ ாங ்க ாங்கில் கைது செய்யப்பட்டனர். பிறகு அங்கு இருந்து அவர்கள் அமெரிக்காவின் கோரிக்கையின் பேரில் நாடு கடத்தப்பட்டனர்.

அவர்கள் மீது நெப்ராஸ்கா ‌ நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் வழக்கு தொடரப்பட்டது. போலியாக வர்த்தகம் நடந்தது போல காட்டி, செயற்கையாக விலையை ஏற்றி, தாங்கள் வாங்கி வைத்து இருந்த பங்குகளை அதிக விலைக்கு விற்று லாபம் அடைந்ததாக அவர்கள் கு‌ற்ற‌த்தை ஒப்புக்கொண்டனர்.

இதுபோன்ற மோசடியில் 90 வாடிக்கையாளர்களும், 7 பங்கு மார்க்கெட் தரகு நிறுவனங்களும் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டன. இந்த மோசடி மூலம் அமெரிக்க பங்கு முதலீட்டாளர்களுக்கு ரூ.12 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது என்று குற் ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டது.

இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க ‌ நீ‌திம‌ன்ற‌ம், மாரிமுத்துக்கு 81 ம ாத‌ம் ‌சிறை தண்டனை விதித்தது. மோசடியில் ஏமாந்தவர்களுக்கு ரூ.12 கோடி நஷ்டஈடு கொடுக்கவும் உத்தரவிட்டது.

அவரது கூட்டாளி ராமநாதனுக்கு 2 ஆண்டு ‌ சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இன்னொரு கூட்டாளியான சொக்கலிங்கம் ராமநாதன் தலைமறைவாக இருக்கிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு.. முக்கிய அறிவிப்பு வெளியீடு..

வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்டும்.. அண்ணாமலை விமர்சனம்..!

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்விற்கு விண்ணபிக்க கடைசி தேதி: அரசுத் தேர்வுகள் இயக்ககம்

விவசாயிகளை திமுக அரசு ஏமாற்றுவதில் வல்லவர்கள் என்பதற்கு வேளாண் பட்ஜெட் ஒரு சான்று: ஈபிஎஸ்

இந்தி மொழி குறித்து பவன் கல்யாண் பேச்சு.. நடிகர் பிரகாஷ்ராஜ் பதிலடி..!

Show comments