Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோங்கா தீவில் பயங்கர நிலநடுக்கம்

Webdunia
சனி, 13 பிப்ரவரி 2010 (18:28 IST)
தெற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள டோங்கா எனும் தீவில் இன்று பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளீயேறினர்.

இந்த நாடு 169 சிறிய, சிறிய தீவுக் கூட்டங்களை உள்ளடக்கியது. 500 மைல் சுற்றளவுக்குள் இந்த தீவு கூட்டங்கள் உள்ளன.

இன்று காலை டோங்கா தீவின் தலை நகரில் இருந்து தென் கிழக்குப் பகுதியில் சுமார் 60 மைல் தொலைவில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3 புள்ளியாக பதிவாகி இருந்தது.

இந்த நில நடுக்கம் பூமியில் அதிக ஆழம் இல்லாமல் உருவாகி இருந்தது. இதனால் டோங்காவில் கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின.

மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் தெரியவில்லை.

டோங்கா தீவு கூட்டங்கள், அடிக்கடி நில நடுக்கம் ஏற்படும் அபாயப் பகுதியில் உள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் அங்கு 8 ரிக்டர் அளவு கோலுக்கு ஏற்பட்ட மிகப்பயங்கர நில நடுக்கத்தில் சிக்கி 8 பேர் பலியானார்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்துவிட்டார்.. திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து சித்தர்..!

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்.. ரெய்டு சென்ற போலீஸ் அதிகாரி படுகாயம்..!

இளைஞரின் செல்போனை திருடிய குரங்கு.. கால் அட்டெண்ட் செய்து பேசியதா?

இன்று இரவுக்குள் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை அலெர்ட்!

வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை..!

Show comments