Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாக்.கில் தற்கொலைத் தாக்குதல்: புத்தாண்டு தினத்தில் 75 பேர் பலி

Webdunia
சனி, 2 ஜனவரி 2010 (09:52 IST)
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள பன்னு மாவட்டத்தில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 75 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பன்னு மாவட்டத்தின் லக்கி மர்வத் பகுதிக்கு அருகே உள்ள ஷா ஹஸன் கான் என்ற இடத்தில் புத்தாண்டை முன்னிட்டு கைப்பந்துப் போட்டிகள் நடைபெற்றது. விளையாட்டைக் காண ஏராளமானோர் கூடியிருந்த நேரத்தில் தற்கொலைத் தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டு நிரம்பிய வாகனத்தை வெடிக்கச் செய்தான்.

இதில் 75 பேர் உயிரிழந்ததாகவும், 50க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புத்தாண்டு தினத்தன்று நடத்தப்பட்ட இந்த பயங்கரத் தாக்குதலால் பன்னு மாவட்ட மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சர்கள் பெரிய கருப்பன், எஸ்.எஸ்.சிவசங்கர் மீதான வழக்குகள்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு.. 20 வயதில் சோகம்..!

சென்னையில் 3 இடங்களில் விபத்து நடைபெறும்.. மிரட்டல் விடுத்த ஆந்திர இளைஞர் கைது..!

‘ரூ’ மட்டும் போட்டால் போதுமா? தமிழை பயிற்றுமொழியாக்க சட்டம் இயற்றுங்கள்: ராமதாஸ்

மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை: விஜய்வசந்த் எம்.பி. ஒத்திவைப்பு தீர்மானம்

Show comments