Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் இல்லை: அமெரிக்கா

Webdunia
வெள்ளி, 11 டிசம்பர் 2009 (18:21 IST)
காஷ்மீர் பிரச்னையில் தலையிட வேண்டும் என்ற பாகிஸ்தான் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

பாகிஸ்தான் அதிபர் ஆஸிப் அலி சர்தாரி, 'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் நேற்று எழுதிய கட்டுரை ஒன்றில், மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் சண்டைகளுடன் காஷ்மீர் பிரச்னைக்கு தொடர்புள்ளதாகவும், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இந்த பிரச்னைக்கு தீர்வு காண அமெரிக்கா தலையிட்டு தனது நடுநிலைமையை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவரது இந்த கோரிக்கையை அமெரிக்கா இன்று நிராகரித்தது.

இது தொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க பொது விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் பி.ஜே. கிரவுலி, காஷ்மீர் பிரச்னை இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளதாகவும், அதே சமயம் அப்பிரச்னைக்கு இரு நாடுகளும்தான் இறுதித் தீர்வு காணவேண்டும் என்றும் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

Show comments