Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிரவாத குழுக்களுடனான ஐஎஸ்ஐ தொடர்பை கைவிட யு.எஸ். வலியுறுத்தல் : ஹிலாரி

Webdunia
புதன், 28 அக்டோபர் 2009 (13:39 IST)
தீவிரவாத குழுக்களுடன், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ க்கு உள்ள தொடர்பை கைவிடுமாறு பாகிஸ்தானை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதாக அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் பயணமாக இன்று பாகிஸ்தான் வந்த ஹிலாரி,இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்தார்.

மேலும் மும்பை தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துமாறும் பாகிஸ்தானை அறிவுறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

கடந்த ஒன்பது மாதங்களில் ஐஎஸ்ஐ - யிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருந்தபோதிலும்,ஐஎஸ்ஐ - க்கும் சில தீவிரவாத இன்னும் தொடர்பு இருப்பது கவலையளிப்பதாக உள்ளது.

இது தொடர்பாக நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம்.

பாகிஸ்தான் தலைவர்களுடனான எனது சந்திப்பின்போது பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளேன்.அதில் மும்பை தாக்குதலும் முக்கியமான ஒன்று என கிளின்டன் மேலும் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

உத்தர பிரதேசத்தில் புல்டோசர் போல் தமிழகத்தில் வரி வசூல்.. மக்கள் கொந்தளிப்பு..!

Show comments