Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மி‌ழ் இளைஞ‌ர்களை சு‌ட்டு‌க் கொ‌ல்லு‌ம் வீடியோ ஆதார‌ம் உ‌ண்மையே - ஆ‌ய்‌வி‌ல் உறு‌தி

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2009 (19:28 IST)
போ‌ரி‌ன் போது ‌சிறை ‌பிடி‌க்க‌ப்ப‌ட்ட ஈழ‌த் த‌மி‌ழ் இளைஞ‌ர்களை ‌நி‌ர்வாணமா‌க்‌கி ‌சி‌றில‌ங்க ராணுவ‌த்‌தின‌ர் சு‌ட்டு‌க் கொ‌ல்லு‌‌ம் ‌வீடியோ உ‌ண்மையானதே எ‌ன்று முத‌‌ற்க‌ட்ட ஆ‌ய்வு உறு‌தி செ‌ய்து‌ள்ளது.

‌ விடுதலை‌‌ப் பு‌லிகளு‌க்கு எ‌திரான போ‌ரி‌ன் போத ு சிறை பிடிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை நிர்வாணமாக்கி, கைகள் பின்னா‌ல் கட்டப்பட்டு, கண்களும் கட்டப்பட்ட நிலையில் சிறீலங்க ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படும் வீடியோவை சான‌ல் 4 தொலை‌க்கா‌ட்‌சி ‌வெளிவிட்டிருந்தது. ஆனால் அது சித்தரிக்கப்பட்ட ஒன்று என் சிறீலங்கா அரசு ‌நிராக‌ரி‌த்தது.

ஆனால் இன அழிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பினரின் ஏற்பாட்டி‌ல், அந்த வீடியோவை ஆராய்ந்து உண்மை நிலையைக் கண்டறிய அமெரிக்க வல்லுநர்கள் நியமிக்கப்ப்பட்டனர்.

அவர்களின் முதற்கட்ட அறிக்கையின்படி, அ‌ந்த வீடியோ உண்மையானது, அதன் காட்சிகள் தொடர்ந்து வருகின்றன, அந்த வீடியோவை நிறுத்தி, காட்சிகளை சே‌ர்‌த்தத‌ற்கோ, நீக்கியதற்கோ ஆதாரங்கள் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆய்வின் முழுமையான அறிக்கை நவம்பர் மாதத்தில் ‌கிடை‌க்கலா‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

ஆரம்பகட்ட அறிக்கையில் ‌சில விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அந்த அறிக்கையின் முக்கிய குறிப்புகள் வருமாறு :

வீடியோ அல்லது ஆடியோ பகுதி‌யி‌ல் எதுவும் திருத்தியமைக்கப்படவில்லை

இரண்டாவதாகச் சுடப்பட்ட நபரைச் சூழ்ந்துள்ள இரத்தம் முதலில் சுடப்பட்ட வெள்ளைச் சட்டை வாலிபரைச் சூழ்ந்துள்ள இரத்தத்திலும் பார்க்க கூடிய நிறமாக உள்ளது. இர‌த்த‌ம் ஆ‌க்சிஜனேற்றம் அடைந்தால் அதன் நிறம் மாறும். எனவே இரண்டாவது நபரின் இரத்தம் கூடுதல் சிவப்பாக உள்ளது, அவர் பின்ன‌ர் சுடப்பட்டதை உறுதிப்படுத்துகிறது.

இரு சூட்டுச் சம்பவங்களின் சத்தம் வருவதிலும் உள்ள தாமதம் ஒத்ததாக உள்ளது.

முன்பே சுடப்பட்டவரின் காலானது அடுத்த சூட்டுக்கு மெதுவாக உயர்ந்து பின்னர் பழைய நிலைக்கே செல்வது அவர் முதலில் இறக்காமல் இருந்ததைக் காட்டுகிறது.

இந்த உறுதிப்படுத்தல்களின் அறிக்கை மிக விரைவில் வெளியிடப் படவுள்ளதாக இன அழிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பினர் கூறியுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?

இன்று இரவில் கனமழை பெய்யும்: 22 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

இன்று கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..!

3 வருடங்களுக்கு முன் டிரம்ப் ஃபேஸ்புக் கணக்கை முடக்கிய மார்க்.. இன்று திடீர் சந்திப்பு..!

20 வருடங்களாக மூக்கில் இருந்த டைஸ்.. 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை..!

Show comments