Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜபக்ச ஆட்சியில் 34 ஊடகவியலாளர்கள் படுகொலை!

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2009 (12:03 IST)
இலங்கையில் 2004ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச பிரதமராகவும், பிறகு 2005ஆம் ஆண்டில் அதிபராகவும் பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை 34 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டில் இயங்கிவரும் ‘ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள ்’ அமைப்பு தெரிவித்துள்ளது.
அனைத்துலக ஒலிபரப்புக ் கூட்டத்தாபனத்தின் தமிழ் வானொலியின் மட்டக்களப்புச் செய்தியாளர் ஜி.நடேசன் 2004ஆம் ஆண்ட ு மே மாதம் 31ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டது முதல் இதுவரை தர்மரட்ணம் சிவராம ், புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி உட்பட 34 ஊடகவியலாளர்கள் படுகொல ை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் பட்டியல ை வெளியிட்டுள்ள இந்த அமைப்ப ு, 34 பேரில் 30 பேர் தமிழர்கள் எனவும ், மூவர ் சிங்களவர்கள் என்றும் மற்றொருவர் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும ் சுட்டிக்காட்டியுள்ளது.
படுகொலை செய்யப்பட்டவர்கள ் தவி ர, மேலும் பல ஊடகவியலாளர்கள் சிறீலங்கா படைப் புலனாய்வாளர்கள ், துணைப்படைக் குழுக்களால் தாக்கப்பட்டும ், அச்சுறுத்தப்பட்டும் இருப்பதுடன ், மேலும ் பல வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சண்டே டைம்ஸ் ( Sunday Times) பத்திரிகையின் எழுத்தாளர் எஸ்.ஜே. திஸ்ஸநாயகம ் மற்றும் யசிகரன ், அவரத ு மனைவி வளர்மதி போன்றவர்கள் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்ட ு, ஒர ு வருடத்திற்கும் மேலாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா அரசுக்கு அஞ்ச ி நாட்டைவிட்டு வெளியேறிய ஊடகவியலாளர்கள ், மனித உரிமையாளர்கள ், மற்றும் பலரை இணைத்த ு ஐரோப்பாவைத் தளமாகக் கொண்டு இந்த “இலங்கையின் சனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்ப ு” இயங்கி வருகின்றது.

இவ்வமைப்பு அளித்துள்ள கொல்லப்பட் ட ஊடகவியலாளர்களின் விவரங்கள்:
2004
1. அய்யாத்துரை நடேசன ் ஊடகவியலாளர் மே 31
2. கந்தசுவாமி ஐயர ் பாலநடராஜ் எழுத்தாளர் ஆகஸ்ட் 16
3. லங்கா ஜயசுந்த ர புகைப்பட ஊடகவியலாளர் டிசம்பர் 11
2005
4. தர்மரட்ணம் சிவராம ் ஆசிரியர் ஏப்ரல் 28
5. கண்ணமுத்து அரசகுமார ் ஊடகப்பணியாளர் ஜுன் 29
6. ரேலங்கி செல்வராஜ ா ஊடகவியலாளர் ஆகஸ்ட் 12
7. டீ.செல்வரட்ணம ் ஊடகப்பணியாளர் ஆகஸ்ட் 29
8. யோககுமார ் கிருஷ்ணபிள்ளை ஊடகப்பணியாளர் செப்டம்பர் 30
9. எல்.எம்.பளீல ் ( நற்பிட்டிமுனை பளீல்) எழுத்தாளர் டிசம்பர் 02
10. கே.நவரட்ணம ் ஊடகப்பணியாளர் டிசம்பர் 22
2006
11. சுப்ரமணியம ் சுகிர்தராஜன் ஊடகவியலாளர் ஜனவரி 24
12. எஸ்.ஆர்.கணநாதன ் உரிமையாளர் பிப்ரவரி 01
13. பஸ்ரின் ஜோர்ஜ ் சகாயதாஸ் ஊடகப்பணியாளர் மே 03
14. ராஜரட்ணம ் ரஞ்சித்குமார் ஊடகப்பணியாளர் மே 03
15. சம்பத் லக்மால் ட ி சில்வா ஊடகவியலாளர் ஜுலை 02
16. மரியதாசன் மனோஜன்ராஜ ் ஊடகப்பணியாளர் ஆகஸ்ட் 01
17. பத்மநாதன ் விஸ்மானந்தன் பாடகர்இ இசையமைப்பாளர் ஆகஸ்ட் 02
18. சதாசிவம் பாஸ்கரன ் ஊடகப்பணியாளர் ஆகஸ்ட் 15
19. சின்னத்தம்ப ி சிவமகாராசா ஊடக உரிமையாளர் ஆகஸ்ட் 20
2007
20. எஸ்.ரவீந்திரன ் ஊடகப்பணியாளர் பிப்ரவரி 12
21. சுப்ரமணியம ் இராமச்சந்திரன் ஊடகப்பணியாளர் பிப்ரவரி 15
22. சந்திரபோஸ் சுதாகர ் ஊடகப்பணியாளா ஏப்ரல் 16
23. செல்வராசா ரஜிவர்மன ் ஊடகவியலாளர் ஏப்ரல் 29
24. சகாதேவன் நிலக்ஸன ் ஊடகவியலாளர் ஆகஸ்ட் 01
25. அந்தோனிப்பிள்ள ை செரின் சித்தராஞ்சன் ஊடகவியலாளன் நவம்பர் 05
26. வடிவேல் நிமலராஜ ் ஊடகப்பணியாளர் நவம்பர் 17
27. இசைவிழி செம்பியன ் ( சுபாஜினி) ஊடகவியலாளர் நவம்பர் 27
28. சுரேஸ் லிம்பிய ோ ஊடகப்பணியாளர் நவம்பர் 27
29. ஆர்.தர்மலிங்கம ் ஊடகப்பணியாளர் நவம்பர் 27
2008
30. பரநிருபசிங்கம ் தேவகுமார் ஊடகவியலாளர் மே 28
31. ராஷ்மி முஹமட ் ஊடகவியலாளர் அக்டோபர் 06
2009
32. லசந்த விக்ரமதுங் க ஆசிரியர் ஜனவரி 08
33. புண்ணியமூர்த்த ி சத்தியமூர்த்தி ஊடகவியலாளர் பிப்ரவரி 12
34. சசி மதன ் ஊடகப்பணியாளர் மார்ச் 06
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

Show comments