Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்துக்களை புண்படுத்தும் விளம்பரம் : பர்கர் கிங் மன்னிப்பு

Webdunia
வியாழன், 9 ஜூலை 2009 (13:23 IST)
இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் விதமாக விளமபரம் வெளியிட்டதற்காக அமெரிக்காவை சேர்ந்த பிரபல பர்கர் நிறுவனமான பர்கர் கிங் மன்னிப்பு கோரியுள்ளது.

உலகம் முழுவதும் 70 க்கும் அதிமமான நாடுகளில் கிளைளை கொண்டுள்ள நிறுவனம் பர்கர் கிங்.

இந்நிறுவனம் ஸ்பெயினில் வெளியிட்ட தனது பர்கர் விளம்பரத்தில் , இந்து கடவுளான மகாலட்சுமியின் படம் போடப்பட்டு விளம்பரம் செய்து இருந்தது.

இறைச்சி சாண்ட்விச் மீது மகாலட்சுமி அமர்ந்திருப்பது போன்று அச்சிடப்பட்டிருந்த அந்த விளம்பரத்திற்கு ஸ்பெயினில் உள்ள இந்து அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதனையடுத்து உடனடியாக இந்த விளம்பரத்தை வெளியிட்டதற்காக பர்கர் நிறுவனம் மன்னிப்பு கோரியதோடு, அந்த விளம்பரம் தடைசெய்யப்படும் என உறுதியும் அளித்தது.

இது தொடர்பாக பர்கர் கிங் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் டென்சி வில்சன் கூறுகையில், பர்கர் கிங் நிறுவனம் தனது அனைத்து வாடிக்கையாளர்களை மட்டுமல்லாமல் , மதத்தவர்களையும் மிகவும் மதிப்பதாக தெரிவித்தார்.

குறிப்பிட்ட அந்த விளம்பரம் ஸ்பெயினில் உள்ள தங்கள் 3 கிளைகளிலும் வியாபரத்தை பெருக்கும் நோக்கத்துடன் , உள் விளம்பரம்தான் செய்யப்பட்டிருந்ததாகவும், யாரையும் புண்படுத்தும் நோக்கில் அந்த விளம்பரம் செய்யப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments