Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கைக்கு 24 மில்லியன் டாலர் கடன் : உலக வங்கி ஒப்புதல்

Webdunia
புதன், 24 ஜூன் 2009 (12:11 IST)
தமிழர்களுக்கான நலத்திட்டங்களை மேற்கொள்ள என்ற பெயரில் இலங்கைக்கு 24 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

சமீபத்திய போரால் இடம் பெயர்ந்த் தமிழர்களுக்கான சுகாதார திட்டங்களை மேற்கொள்ள இந்த உதவி அளிக்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

இதில் 12 மில்லியன் டாலர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களுக்கான சுகாதார திட்டங்களுக்கு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் பெயரைக் கூறி உலக வங்கியிடம் கடன் வாங்கும் இலங்கை அரசு, அந்த தொகையை தனது இராணுவத்திற்கும், சிங்கள் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்குமே பயன்படுத்தி வருகிறது என்பது வெட்ட வெளிச்சமான உண்மை.

தற்போது வாங்கப்படும் கடன் தொகையில் 5 விழுக்காடு கூட தமிழர்களுக்கு போய் சேருமா என்பது கேள்விக்குரிய விடயமே.

இந்நிலையில், இலங்கையின் போர் குற்றங்கள் மற்றும் அரசியல் காரணங்களைக் காட்டி அமெரிக்கா, ஐரோப்பிய சமூகம் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் முதலில் அந்நாட்டிற்கு உலக வங்கி கடன் வழங்க எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும்,பின்னர் எதிர்ப்பை கைவிட்டன.

இதற்கு காரணம் இந்தியாவில் ஆட்சியிலுள்ள காங்கிரஸ் அரசில் இடம் பெற்றுள்ள சிவசங்கர மேனன், எம்.கே. நாராயணன் போன்ற தமிழர் விரோத அதிகாரிகளின் மூலம் உலக அளவில் தங்களுக்கு ஆதரவாக இலங்கை அரசு 'லாபி' செய்து காரியத்தை சாதித்துக் கொள்வதுதான்.தற்போதும் அதுதான் நிகழ்ந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஜிபிஎஸ் நோய்க்கு 10ஆம் வகுப்பு மாணவி பலி.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி..!

மகளிர் உரிமை தொகை போல் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000.. தமிழக அரசுக்கு வேண்டுகோள்..!

Show comments