Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முல்லைத்தீவில் தாக்குதல்: 102 தமிழர்கள் பலி

Webdunia
ஞாயிறு, 19 ஏப்ரல் 2009 (11:01 IST)
இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது சிறிலங்கா படையினர் நேற்று நடத்திய தாக்குதல்களில் 102 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

' மக்கள் பாதுகாப்பு வல ய' பகுதிகளான வலைஞர்மடம ், அம்பலவன்பொக்கணை பகுதிகளில் சிறிலங்கா படையினர் நேற்று (வெள்ளி) காலை துவங்கி இரவு வரை எறிகண ை, வெடிகண ை, துப்பாக்கிச் சூடு தாக்குதல்களை நடத்தினர்.

இதில் 102 தமிழர்கள் கொல்லப்பட்டதுடன், 156க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக புதினம் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்கூறிய பகுதிகளில் உள்ள 3 மருத்துவ சிகிச்சை நிலையங்களில் காயமடைந்த மக்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும், திலீபன் மருத்துவ சேவைப் பிரிவினரும் காயமடைந்த மக்களுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்விடங்கள் மீதும் சிறிலங்கா படையினர் நேற்று கடுமையான எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர். மாத்தளன் பகுதி மீதும் சிறிலங்கா படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments