Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புது‌க்குடியிருப்பு மோதல் : மூன்று நாட்களில் 1,000 படையினர் பலி - புலிகள்

Webdunia
செவ்வாய், 24 பிப்ரவரி 2009 (21:04 IST)
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற சிறிலங்க ராணுவம் மேற்கொண்டுள்ள பெரும் படையெடுப்பிற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 1,000 படையினர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்க ராணுவத்தின் 53வது, 58வது, 59வது படைப் பிரிவுகளும், சிறப்பு தாக்குதல் படைப்பிரிவு-3, 4 ஆகிய படையினரும் புதுக்குடியிருப்புப் பகுதியை கைப்பற்ற ஐந்து முனைகளில் இருந்து பெரும் படையெடுப்பை மேற்கொண்டு வருகின்றன.

கடந்த மூன்று நாட்களாக இந்த ஐந்து முனைகளில் இருந்து முன்னேறும் படைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் சமரில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மூன்று நாள் சண்டையில் இதுவரை 1,000 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 3,000க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளதாகவும், புலிகளின் சமர் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்ததாக புதினம் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அப்பகுதியில், படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான சண்டை தொடர்ந்து நடந்து வருவதாகவும் அச்செய்தி மேலும் தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் - பாலஸ்தீன போரை நிறுத்துவேன்: டிரம்பின் வீடியோ வைரல்...!

நடிகை கஸ்தூரி மீது மேலும் 2 வழக்குகள்: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்..!

தென் மாவட்டத்தில் போட்டி.. கட்சியில் பிக்பாஸ் பிரபலங்கள்.. சீமானின் மெகா திட்டம்..!

திருச்சி சூர்யாவுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது: நீதிமன்றத்தில் அரசுதரப்பு பதில்..!

Show comments