இலங்கை அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சானாறு பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் உயரதிகாரி உட்பட 12 சிறிலங்க சிறப்பு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
கஞ்சிகுடிச்சானாறு பகுதியில் புத்த விகார் ஒன்றிற்கான அடிக்கல் நாட்டு விழா, சிறிலங்க சிறப்பு அதிரடிப்படையினர் ஏற்பாட்டில் நடைபெற்றது. நிகழ்வுப் பகுதியில் நேற்று மாலை 2.40 மணியளவில் பெரும் குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
இதில், சிறிலங்க சிறப்பு அதிரடிப்படை அதிகாரி உட்பட 12க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர்.
இத்தகவலை அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகளும் உறுதி செய்துள்ளனர்.
குண்டுவெடிப்புச் சத்தம் பல கிலோ மீட்டர் தொலைவிற்கு கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.