Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய தபேலா இசைக்கலைஞர் சகீர் உசேனுக்கு கிராமி விருது

Webdunia
செவ்வாய், 10 பிப்ரவரி 2009 (12:46 IST)
இந்திய தபேலா இசைக் கலைஞர் சகீர் உசேனுக்கு, சர்வதேச அளவில் இசைத்துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் கிராமி விருது ( Grammy awar d) வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடந்த விருது வழங்கும் விழாவில், குளோபல் டிரம் ப்ராஜக்ட் என்ற ஆல்பத்திற்கு சிறப்பாக இசை அமைத்ததற்காக, சிறந்த சர்வதேச இசை ஆல்பம் பிரிவுக்கான கிராமி விருது சகீர் உசேனுக்கு வழங்கப்பட்டது.

குளோபல் டிரம் ப்ராஜக்ட் ( Global Drum Projec t) இசை ஆல்பத்திற்கு, மிக்கி ஹர்ட், நைஜீரியாவைச் சேர்ந்த சிகிரு அடிபொஜு, போர்டோரிகாவைச் சேர்ந்த ஜாஸ் இசைக் கலைஞர் கியோவன்னி ஹிடல்கோ ஆகியோருடன் இணைந்து தபேலா இசைக்கலைஞர் சகீர் உசேன் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

பெண் போலீஸ் டிஐஜியையே மிரட்டிய சைபர் குற்றவாளி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

Show comments