Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்புலிகள் தாக்குதல்: 15 கடற்படையினர் பலி

Webdunia
திங்கள், 9 பிப்ரவரி 2009 (10:57 IST)
முல்லைத்தீவில் இருந்து 52 கடல்மைல் தொலைவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அணி நடத்திய கடுமையான தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் சூப்பர் டோரா மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதில் 15 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: முல்லைத்தீவில் இருந்து 52 கடல்மைல் தொலைவில் நேற்று (ஞாயிறு) காலை 5.30 மணி முதல் 6 மணி வரை சிறிலங்கா கடற்படையினர் மீது கடற்புலிகள் தாக்குதல் நடத்தினர்.

இதில ் கடற்படையினரின் சூப்பர் டோரா கப்பல் கடல்புலிகளின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன், அதில் இருந்த 15 சிறிலங் க கடற்படையினரும் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்த ு, கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் கடற்படையினரின் மற்றொரு சூப்பர் டோரா கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. இம்மோதலில் கடற்புலிகள் நால்வரும் கடற்கரும்புலிகள் இருவரும் வீரச்சாவடைந்துள்ளனர் என புதினம் இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments