Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ஆயுத பயன்பாட்டை தடுக்கும் பன்னாட்டு உடன்படிக்கைத் தேவை: இந்தியா

Webdunia
சனி, 7 பிப்ரவரி 2009 (14:38 IST)
அணு ஆயுத குவிப்பால் மானுடத்திற்கு உருவாகியுள்ள ஆபத்தை தடுக்க அணு ஆயுத பயன்பாட்டைத் தடை செய்யும் பன்னாட்டு உடன்படிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது.

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற ‘அணு ஆயுத பரவல், ஆயுதக் கட்டுப்பாடு, அணு ஆயுதங்களின் எதிர்காலம் - அணு ஆயுதமற்ற நிலை சாத்தியமா? ’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், அணு ஆயுதங்களை முழுமையாக ஒழித்திட வேண்டும் என்ற கொள்கையில் இன்றுவரை இந்தியா நிலையாக உள்ளது என்று பேசினார்.

“உலகளாவிய அளவில் அணு ஆயுத ஒழிப்பை உறுதி செய்யும் ஒரு பன்னாட்டு உடன்படிக்கை வேண்டும் என்று கூறும் ஒரே அணு ஆயுத நாடு இந்தியாதான ்” என்று கூறிய நாராயணன், இது தொடர்பாக 1988ஆம் ஆண்டு ஐ.நா.வில் இந்தியா முன்மொழிந்த அணு ஆயுத ஒழிப்பு தீர்மானம் அந்த இலக்கை நோக்கிய விரிவான ஒரு நகர்த்தலாகும் என்று கூறியுள்ளார்.

அணு ஆயுத அச்சுறுத்தலற்ற ஒரு உலகை உருவாக்க வேண்டும் என்ற இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மிக விருப்பமான ஆலோசனையை இன்றுவரை இந்தியா முன்னிருத்தி செயலாற்றி வருகிறது என்று நாராயணன் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments